Galaxy S9 கைப்பேசியில் தரப்படவுள்ள இரு புதிய வசதிகள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
142Shares
142Shares
lankasrimarket.com

சாம்சுங் நிறுவனம் இவ் வருடம் Galaxy S9 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியில் தரப்படவுள்ள புதிய அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 3D இமோஜிக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அனிமோஜிக்களை விடவும் மேம்படுத்தப்பட்டதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும்.

அத்துடன் சிறந்த ஒலிநயத்தை தரக்கூடிய ஸ்டீரியோ தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்பீக்கர்களும் உள்ளடக்கப்படவுள்ளன.

இப் புதிய கைப்பேசியின் அறிமுகம் தொடர்பான தகவல்கள் இம் மாதம் 25ம் திகதி இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் தெரியப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்