இந்தியாவில் இனி 13 இலக்க செல்போன் எண்கள்: மத்திய அரசு முடிவு

Report Print Athavan in மொபைல்
51Shares
51Shares
lankasrimarket.com

10 இலக்க செல்போன் எண்களுக்கு மாற்றாக 13 இலக்க செல்போன் எண்களை வழங்க தயாராகுமாறு இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சுற்றறிக்கை கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள 10 இலக்க செல்போன் எண்கள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் முதல் 13 இலக்க எண்களாக மாற்றப்படும்.

அக்டோபர் மாதம் முதல், வாடிக்கையாளர்கள் வாங்கும் செல்போன் எண்கள் 13 இலக்க எண்களை கொண்டதாக இருக்கும, இந்த மாற்றத்தை இந்த வருடத்துக்குள் செய்துமுடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால் சீனாவுக்கு அடுத்து நீளமான செல்பொன் எண்களை உடைய நாடக இந்தியா இருக்கும். தற்போது சீனாவில் 11 இலக்க எண்கள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த புதிய மாற்றத்தால் மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. வங்கிகளில் உள்ள விண்னப்ப படிவங்களில் இனி 10 எண்களுக்கு பதிலாக 13 எண்களை சேர்க்க வேண்டும்.

அதோடு ஆதார், எல்.பி.ஜி போன்ற இடங்களில் தங்களது எண்களை மீண்டும் பதிவு செய்யப்படும் மோசமான நிலை மக்கள் தள்ளப்படுவர்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்