FHD+ திரையுடன் விற்பனைக்கு வந்தது Nokia 7 Plus

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

நோக்கியா நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Nokia 7 Plus இனை சீனாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இதன் விலையானது சீன நாணயப் பெறுமதியில் 2,299 யுவான்களாகவும், 364 அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகின்றது.

இக் கைப்பேசியின் சிறப்பம்சங்களாக 6 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரை, Qualcomm Snapdragon 660 Mobile Processor என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

மேலும் 13 மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஏனைய நாடுகளிலும் இக் கைப்பேசி விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்