அதிரடி விலைக்குறைப்பு செய்யப்பட்டது சாம்சுங்கின் Galaxy S8 மற்றும் S8 Plus

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

இந்த வருடம் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Galaxy S9 மற்றும் S9 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் அறிமுகம் செய்த Galaxy S8 மற்றும் S8 Plus ஆகிய கைப்பேசிகளின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது.

இதன்படி ஏற்கணவே உள்ள விலையில் இருந்து Galaxy S8 ஆனது 125 டொலர்களும், S8 Plus ஆனது 135 டொலர்களும் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் அளவில் புதிய கைப்பேசிகளான Galaxy S9 மற்றும் S9 Plus கைப்பேசிகள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே மேற்கண்ட விலைக்குறைப்பானது அமெரிக்காவில் மாத்திரம் கிடைக்கப்பெறுகின்றது.

எவ்வாறெனினும் ஐரோப்பிய நாடுகளிலும் இச் சலுகை விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்