HTC அறிமுகம் செய்யவுள்ள புதிய கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

Report Print Givitharan Givitharan in மொபைல்
95Shares
95Shares
lankasrimarket.com

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் HTC நிறுவனம் U12+ எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் கசிந்துள்ளன.

இக் கைப்பேசியானது 6 அங்குல அளவுடையதும், WQHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் Qualcomm Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

தரவிர 16 மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய டுவில் பிரதான கமெரா, தலா 8 மெகாபிக்சல்களை உடைய டுவல் செல்ஃபி கமெரா, 3420 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்