புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் Huawei

Report Print Givitharan Givitharan in மொபைல்
40Shares
40Shares
lankasrimarket.com

வேகமாக செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Huawei நிறுவனம் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Huawei Honor 7A எனும் இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1440 x 720 ரெசொலூசன் உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 430 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Android 8.0 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 13 மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது எதிர்வரும் மார்ச் 30ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் விலையானது 239 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்