அதிநவீன வசதிகளுடன் உருவாகும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்

Report Print Deepthi Deepthi in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜி7 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன், பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) பட்டன் மற்றும் f/1.5 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

எல்ஜி ஜி7 (LG-G7 Flagship)ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீயோல் நகரில் அறிமுகம் செய்யப்பட்டு கொரியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பிரத்யேக ஏ.ஐ. பட்டன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இடம்பெற்றிருக்கும் என சமீபத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.

இவை உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்று பிரத்யேக பட்டன் எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படும்.

கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் எல்ஜி நிறுவனத்தின் கியூ லென்ஸ் மற்றும் கியூ வாய்ஸ் உள்ளிட்ட ஏ.ஐ. சேவைகளை பயன்படுத்த முடியும். ஏ.ஐ. சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போனில் அதற்கான சென்சார் மட்டும் பிரத்யேக பட்டன் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்