கூகுள் பிக்ஸெல் கைப்பேசிகளில் இருந்து ஸ்பார்ம் அழைப்புக்கள்: எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in மொபைல்
41Shares
41Shares
lankasrimarket.com

சம காலத்தில் கைப்பேசிகளின் ஊடாக வரும் ஸ்பார்ம் அழைப்புக்களினால் பல ஆபத்துக்களை எதிர்நோக்கி வேண்டியுள்ளது.

இந்த அச்சுறுத்தலானது கூகுள் பிக்ஸெல் கைப்பேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாகவே காணப்படுவதாக எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இவ் வகைக் கைப்பேசிகளில் தானியங்கி முறையில் வொயிஸ் மெயில் சேவைக்கு ஸ்பார்ம் அழைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கணவே ஸ்பார்ம் இலக்கங்கள் மற்றும் திரையின் வெளிச்சத்தினை மாற்றியமைக்கும் ஸ்பார்ம்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கான ஸ்பார்ம் பில்டர் புரோகிராமும் உருவாக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே இப் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வசதிகள் எதிர்வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்