உலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்
91Shares
91Shares
lankasrimarket.com

உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை கடவுச்சொல் பாதுகாப்பினை கொண்டிருக்கவில்லை என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கடவுச்சொற்களை இடாமலேயே பயனர்கள் கைப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை 14 சதவீதமான பயனர்கள் தமது கோப்புக்களை என்கிரிப்ட் செய்து உச்ச பாதுகாப்பில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனங்காணப்படாதவர்கள் உள்நுழைந்து தரவுகளை திருடுவது தவிர்க்கப்படுகின்றது.

இந்த ஆய்வினை ரஷ்யாவை சேர்ந்த சைபர் செக்கியூரிட்டி நிறுவனமான Kaspersky Lab மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்