ஐரோப்பிய ஒன்றியம் கோரும் 100bn-euro (£84bn) பணத்தை பிரித்தானியா செலுத்தாது

Report Print Thayalan Thayalan in பணம்
ஐரோப்பிய ஒன்றியம் கோரும் 100bn-euro (£84bn) பணத்தை பிரித்தானியா செலுத்தாது
0Shares
0Shares
Cineulagam.com

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடவடிக்கையின் போது 85 பில்லியன் பவுண்களை பிரித்தானியா செலுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ள நிலையில், குறித்த பணத்தொகையை பிரித்தானியா செலுத்தாதென பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை மாத்திரமே பிரித்தானியா செலுத்தும். மாறாக ஐரோப்பிய ஒன்றியம் கோரும் பணத் தொகையை பிரித்தானியா செலுத்தாது” என தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் விவகாரத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரித்தானியா செலுத்த வெண்டிய தொகையை 60 பில்லியன் யூரோவில் இருந்து ஒன்றியம் அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே டேவிட் மேற்படி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பிரெக்சிற் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பேச்சாளர் மைக்கல் பார்னியர் (Michael Barnier) பிரெக்சிற் தொடர்பான விதிமுறைகளை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments