2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3982 பில்லியன் ரூபா

Report Print Steephen Steephen in பணம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான மதிப்பீட்டு சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சட்டமூல வரைவை நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளார்.

advertisement

இதற்கு அமைய 2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவு 3 ஆயிரத்து 982 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 2 ஆயிரத்து 5.1 பில்லியன் கடனை திரும்ப செலுத்தவும், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள விதவை மற்றும் அனாதை குழந்தைகள் சட்டமூலங்களின் கீழ் செலவிடப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவு ஆயிரத்து 308.9 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மூலதன செலவு 668 பில்லியன் ரூபா எனவும், 2018 ஆம் ஆண்டில் அரச வருமானம் மற்றும் வெளிநாட்டு உதவி 2 ஆயிரத்து 174 பில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்