முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.13 கோடி ஊதியம் கொடுத்த இன்போசிஸ் நிறுவனம்

Report Print Raju Raju in பணம்
0Shares
0Shares
lankasrimarket.com

இன்போசிஸ் நிறுவனம், அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுக்கு 2017-18 நிதியாண்டிற்கான ஊக்க ஊதியமாக, 12.92 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, விஷால் சிக்கா 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பதவி விலகினார்.

இதையடுத்து தற்காலிகமாக தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்ற, பிரவின் ராவுக்கான ஊக்க ஊதியம், 7.80 கோடியில் இருந்து, 8.22 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதே போல சமீபத்தில் இன்போசிஸ் இயக்குனர் குழுவில் இருந்து வெளியேறிய ரவி வெங்கடேசன், 1.43 கோடி ரூபாய் ஊக்க ஊதியம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்