இலங்கையில் நாளொன்றுக்கு 880 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் வாகனங்கள்

Report Print Vethu Vethu in வாகனம்
401Shares
401Shares
lankasrimarket.com

இலங்கையினுள் நாள் ஒன்று 8800 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நவீன மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டு வாகனங்களை விடவும் பயன்படுத்திய மோட்டார் வாகனங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கமைய நாள் ஒன்றுக்கு சாதாரணமாக 1268 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இலங்கையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 342215 ஆகும். அவற்றில் 262012 மோட்டார் சைக்கிள்களாகும். .

அத்துடன் முதல் 9 மாதங்களில் புதிதாக 29684 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்