இலங்கையில் வாகன இறக்குமதிகளுக்கு தடை!

Report Print Shalini in வாகனம்
0Shares
0Shares
Cineulagam.com

பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத அனைத்து வாகன இறக்குமதிகளுக்கும் நிதி அமைச்சு தடை விதித்துள்ளது.

சாரதி மற்றும் பயணிகளுக்கான ஆசனப்பட்டி, சாரதி மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு பலூன்கள், Anti - Locking Breaking System standards ஆகிய பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத வாகனங்களின் இறக்குமதியே இவ்வாறு தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் முழுமையா தடை செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்