விமானத்தை விட அதிவேகமாக பறக்கும் கார்!

Report Print Raju Raju in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

பயணிகள் விமானத்தின் சராசரி வேகத்தை விட வேகமாக போகும் கார்களை லம்போர்கினி கார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக அளவில் விலை உயர்ந்த கார்களை தயாரித்து விற்பனை செய்வதில் லம்போர்கினி கார் நிறுவனமானது முன்னணி வகிக்கிறது.

அந்த நிறுவனம் தற்போது விமானத்தை விட வேகமாக செல்லும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி Aventador Roadsters ஏன்ற ரக கார்களை அது தற்போது சந்தையில் விட்டுள்ளது.

இந்த கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 200 மைல்கள் வேகத்தில் பயணிக்க கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சாதாரண பயணிகளின் விமானத்தில் வேகம் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 180 தான் கொடுக்கும். இந்த கார் விமானத்தை விட 20 மைல் அதிகம் தருகிறது.

இந்த காரானது வெறும் மூன்று நொடிகளில் 62 மைலை கடக்கும் வல்லமை வாய்ந்ததாகும்.

அதே போல லம்போர்கினியின் Gallardo GT3 FL2 என்ற அதிவேக காரும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இதுவும் Aventador Roadsters போலவே சூப்பரான பல வியக்கத்தக்க அம்சங்களை கொண்டு உருவாக்கபட்டிருக்கிறது.

இந்த காரின் விலை $350,000 என்பது கூடுதல் தகவலாகும்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments