சீனாவில் தயாராகும் எலக்ட்ரிக் கார்

Report Print Givitharan Givitharan in வாகனம்
0Shares
0Shares
Cineulagam.com

தற்போது அனேகமான கார் உற்பத்தி நிறுவனங்கள் வினைத்திறனாக செயற்படக்கூடிய எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இவற்றின் வரிசையில் Volvo நிறுவனமும் இணைந்துள்ளது.

சுவீடன் நாட்டினை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் இந்நிறுவனம் குறித்த எலக்ட்ரிக் கார்களை சீனாவில் தயார் செய்யவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறித்த காரிற்கு Volvo XC40 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் 2019ம் ஆண்டில் இதன் உற்பத்தி பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

ஐந்தாட்டு திட்டத்தினைக் கொண்ட இக் கார் வடிவமைப்பிற்கு சீன அரசின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

சீனாவில் இக் கார் உற்பத்தி செய்யப்படுவதனால் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் குறித்த கார் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments