கண்கவர் வடிவமைப்புடன் அறிமுகமாகின்றது புதிய Maserati GranTurismo கார்

Report Print Givitharan Givitharan in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

இத்தாலியை தளமாகக் கொண்டுள்ள ஆடம்பர கார் வடிவமைப்பு நிறுவனமான Maserati புதிய கார் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Maserati GranTurismo 2018 எனும் இக் காரானது கண்கவர் வடிவத்தினைக் கொண்டிருப்பதுடன், உயர் வினைத்திறனுடன் செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இதன் இயந்திரமானது 4.7 லீட்டர் v8 ரகத்தினை சேர்ந்தது.

அத்துடன் இவ் இயந்திரம் 460 குதிரை வலு உடையதாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஆறு வேகங்களைக் கொண்ட ZF ரக தானியங்கி கியர்களையும் உள்ளடக்கியுள்ளது.

தற்போது நியூயோர்க்கில் இது அறிமுகம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த வருடம் முதலே விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

எவ்வாறெனினும் இதன் விலை உட்பட ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments