பொலிஸ் படையை ஆக்கிரமிக்கப்போகும் அதி நவீன ரோபோ கார்கள்

Report Print Givitharan Givitharan in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

வல்லரசு நாடுகள் அனைத்தும் தமது இராணுவக் கட்டமைப்பு மற்றும் பொலிஸ் கட்டமைப்பிற்குள் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தி வருகின்றன.

இதேபோல தற்போது முகங்களை அடையாளம் காணக்கூடிய (Facial-Recognition) தொழில்நுட்பத்தினைக் கொண்ட கார்கள் பொலிஸ் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவுள்ளன.

முதன்முறையாக இவ்வகை ரோபோ கார்கள் டுபாய் பொலிசிலேயே பயன்படுத்தப்படவுள்ளன.

இக் கார்கள் குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்களை இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது.

மிகவும் மெதுவாகவே இக் கார்கள் நகரங்களை வலம் வந்துகொண்டிருக்கும். இவற்றினால் ஏனைய கார்களைப் போன்று வேகமாக இயங்க முடியாது.

மேலும் இவற்றில் வெப்ப புகைப்படவியல் தொழில்நுட்பம், License-Plate Reader தொழில்நுட்பம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை சிங்கப்பூரினை தளமாகக் கொண்ட Otsaw Digital நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments