Audi A8 காரில் தரப்படும் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in வாகனம்
336Shares
336Shares
lankasrimarket.com

ஜேர்மனைச் சேர்ந்த முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனமான Audi ஆனது தனது Audi A எனும் நாமத் தொடரில் கார்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த நாமத் தொடரில் அடுத்ததாக Audi A8 எனும் காரினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் காரில் முன்னைய கார்களில் வழங்கப்பட்டிராத புதிய தொழில்நுட்பம் ஒன்று உள்ளடக்கப்படவுள்ளது.

அதாவது 3D ஒலிநயம் உள்ளடக்கப்படவுள்ளது, இதற்காக 1,920 வாற்றில் செயற்படக்கூடிய 23 ஸ்பீக்கர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த தொழில்நுட்பமானது Bang & Olufsen 3D Advanced Sound System என அழைக்கப்படுகின்றது.

மேலும் இக் காரானது 5.5 செக்கன்களில் ஓய்விலிருந்து மணிக்கு 60 மைல்கள் எனும் வேகத்தினை எட்ட வல்லது.

அதிகபட்ச வேகமாக மணிக்கு 130 மைல்களில் பயணிக்கவும் வல்லது, இதன் என்ஜினானது 6 சிலின்டர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்