இலங்கையிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை: Bajaj Auto

Report Print Fathima Fathima in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையில் முச்சக்கர வாகனம் இறக்குமதியை குறைப்பது தொடர்பாக தங்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என Bajaj Auto நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட வண்டிகள் இயங்குவதாகவும் வாகன நெரிசலுக்கும், விபத்துகளுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம் என நாடாளுமன்றத்தில் போக்குவரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என Bajaj Auto நிறுவனத்தின் S Ravikumar(President of Business Development and Assurance) தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டில் மட்டும் ஆறு லட்ச முச்சக்கர வாகனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது வரை நிலைமை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இந்த அறிவிப்பால் தங்கள் நிறுவனத்தின் வருவாயில் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்த விற்பனையில் இலங்கையின் பங்கு 6 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்