தண்டவாளம் இல்லாத ஸ்மார்ட் ரயில் சேவை

Report Print Fathima Fathima in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் தண்டவாளங்கள் இல்லாத ஸ்மார்ட் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ரயில் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் CRRC Corporation இந்த ஸ்மார்ட் ரயிலை உருவாக்கியுள்ளது.

வாகனங்கள் பயணிக்கும் சாலை வழியாகவே வெள்ளை கோடுகளை பின்பற்றி ஸ்மார்ட் ரயில் இயங்கும், இதில் 330 பேர் வரை பயணிக்கலாம்.

12.3 அடி நீளம் கொண்ட ஸ்மார்ட் ரயில், பயணிகளை பொறுத்து மணிக்கு 43 கி.மீ அல்லது 70 கி.மீ வேகத்தில் இயங்கும்.

ஜூஜோ நகரில் நடைபெற்ற வெள்ளோட்டத்தின் போது மக்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

அனைத்து விதமான சோதனைகளும் முடிக்கப்பெற்று அடுத்தாண்டு வசந்த காலம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்