முச்சக்கரவண்டி பதிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Report Print Nivetha in வாகனம்
32Shares
32Shares
lankasrimarket.com

முச்சக்கரவண்டி பதிவுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, 20 வீதத்தால் முச்சக்கரவண்டி பதிவுகள் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 12 இலட்சம் முச்சக்கரவண்டிகள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 35 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு மாத்திரம் வாகன போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான சட்டத்தை எதிர்காலத்தில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது முச்சக்கரவண்டி பதிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டை விடவும் 2017ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களின் வாகன பதிவுகள் சுமார் 45 ஆயிரத்தினால் குறைவடைந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தற்போது 20 வீதத்தால் முச்சக்கரவண்டி பதிவுகளும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்