இறந்த சிறுவனுக்கு உயிர் கொடுத்த மத போதகர்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

மருத்துவர்கள் இறந்தவிட்டதாக கூறிய ஐந்து வயது சிறுவனுக்கு மத போதகர் ஒருவர் மீண்டும் உயிர் கொடுப்பது போல வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிடோரியா நகரில் புகழ் வாய்ந்த தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு Bushiri என்ற மதபோதகர் இறை சேவை செய்து வருகிறார்.

இவர் சம்மந்தமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், அந்த மதபோதகர் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய ஐந்து வயது சிறுவனை ஒரு பொது வெளியில் மக்கள் கூட்டம் சூழ்ந்திருக்க தன் தோளில் போட்டு கொண்டு அங்குமிங்குமாக வேகமாக நடக்கிறார்.

பின்னர் ஒரு வித மயக்க நிலைக்கு சென்று கீழே விழும் அவரை அங்கிருக்கும் சிலர் கைதாங்கலாக பிடித்து தூக்கி விடுகின்றனர். பின்னர் மீண்டும் அந்த சிறுவனை தூக்கி கொண்டு அங்குமிங்கும் அவர் நடமாடுகிறார்.

பிறகு அந்த இடத்தில் கட்டாகும் அந்த வீடியோ காட்சி பின்னர், அந்த சிறுவன் உயிர் வந்து அவர் அவனை தூக்கி தன் இடுப்பில் வைத்து கொள்வது போல உள்ளது.

இது எப்படி சாத்தியம்? ஏன் சில நிமிடம் அந்த வீடியோ காட்சி நின்று பின்னர் தொடர்ந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

தற்போது இந்த விடயத்தை செய்த இந்த மத போதகர் ஏற்கனவே காற்றில் தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments