கடும் பனிப்பொழிவால் உலகம் அழியும்: நனவாகிறதா நோஸ்ராடாமசின் தீர்க்கதரிசனம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

உலகம் கடும் பனிப்பொழிவால் அழியும் என்று 500 வருடங்களுக்கு முன்னர் இத்தாலிய நோஸ்ராடாமஸ் ஒருவரின் தீர்க்கதரிசனம் நனவாகி வருவதாக அச்சுறுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலிய நோஸ்ராடாமஸ் என்று அறியப்பட்டவர் Matteo Tafuri. இவர் 1492 முதல் 1582 ஆம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்துள்ளார். இவரது தீர்க்கதரிசனங்கள் பல நனவாகியுள்ளதாக இத்தாலிய மக்கள் நம்புகின்றனர்.

advertisement

இவரது இறப்புக்கு முன்னதாக உலக அழிவு குறித்து தீர்க்கதரிசனம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் தொடர்ந்து இரண்டு நாள் இத்தாலிய நகரான Salento ல் கடும் பனிப்பொழிவு நேர்ந்தால் அது உலக அழிவுக்கான அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.

500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தெரிவித்த அந்த பனிப்பொழிவு Salento ல் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

Matteo Tafuri தமது தீர்க்கதரிசன குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ”Salento ல் பனை மரங்களெல்லாம் பனியால் மூடும், தெற்கில் இருந்து லேசான காற்று வீசும், தொடர்ந்து இரண்டு நாட்கள் Salento பனியால் மூடும், வானில் இருமுறை மின்னல் வெட்டும், உலகம் அழியும் என்று தெரியும், ஆனால் நான் அதை எண்ணி ஏங்க மாட்டேன்”

Salento நகரம் எப்போதுமே மிதமான வெட்ப காலநிலைக்கு பெயர்போன நகரமாகும். இங்கு பனிப்பொழிவு என்பது அரிதிலும் அரிதான விடயம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். ஆனால் வியக்கும் வகையில் இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது உள்ளூர் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி மாசிடோனியா தேவாலயத்தில் உள்ள கன்னி மேரியின் திருஉருவ படத்தில் கண்ணீர் சொட்டுவதாக தகவல் வெளியானதை அடுத்து தற்போது இந்த பனிப்பொழிவு தீர்க்கதரிசனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments