இத்தாலியில் வட்டமிட்ட வேற்றுகிரகவாசிகளின் விமானம்: திடீரென ஒளிர்ந்த பச்சை வட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

இத்தாலியின் சாலென்றோ பகுதியில் பச்சை நிற ஒளிவட்டத்துடன் கூடிய விமானம் ஒன்று வட்டமிட்ட சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சாலென்றோ பகுட்தியில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது வானில் அதிக வட்டத்தை உமிழ்ந்த வண்ணம் வட்டவடிவிலான தட்டு ஒன்று தென்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானமானது 4 நிமிடங்கள் வரை வானில் வட்டமிட்டதாகவும், அது பல வண்ணங்கலில் தோன்றியதாகவும், உருவம் மாறியதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் குறித்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த காட்சிகளை கமெராவில் பகர்த்திய நபருக்கு இன்னும் அதிர்ச்சி விட்டுமாறவில்லை என கூறப்படுகிறது.

பல வண்ணங்கள் ஒளிர்ந்து கொண்டே இருந்ததாகவும், திடீரென்று பச்சை வண்ணத்தில் தென்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இறுதியில் அந்த தட்டானது இரண்டு பகுதிகளாக பிரிந்து நொடிக்கும் பொழுதில் மறைந்துள்ளது.

குறித்த வீடியோ பதிவை ஆராய்ந்து பார்த்த வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வாளர்கள் இத்தாலியில் தென்பட்டது உண்மையில் வேற்றுகிரவாசிகளின் விமானம் என உறுதிபட தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments