தவளையை குழந்தையாக பெற்றெடுத்த பெண்: வினோத சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜிம்பாப்வேயில் இளம்பெண் ஒருவருக்கு தவளைப் போன்ற ஒரு உயிரினம் பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வேயின் Gokwe பகுதியைச் சேர்ந்தவர் Precious Nyathi(36). இவர் அங்குள்ள பகுதியில் தொழிலாளராக வேலை செய்துள்ளார். மேலும் இவர் கடந்த எட்டு மாதங்களாக கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென்று குழந்தை பிறந்துள்ளது. அது தவளைப் போன்ற உயிரினம் போல் இருந்துள்ளது.

இதனால் கிராம மக்கள் அதை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அது இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவரது கணவர் Nomore கூறுகையில், தன் வீடு முழுவது கிராம மக்கள் சூழ்ந்திருந்தனர்.

அவர்களை எல்லாம் தாண்டி தன் வீட்டிற்குள் சென்ற போது தனக்கு அதிர்ச்சி காத்திருந்தது எனவும், ஏனெனில் தன் மனைவிக்கு பிறந்திருந்தது குழந்தை இல்லை தவளை போன்ற உயிரினம். இதனால் தான் பெரியதொரு சாபத்திற்கு உள்ளானேன் என்று கூறியுள்ளார்.

அங்கிருந்த கிராம தலைவர்கள் அனைவரும் இதை எரித்து விட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் ஒரு பேப்பரில் வைத்து எரித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அப்பெண் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு தெளிவான விளக்கமும் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments