மனிதக் குரங்கை சுட்டு, வெட்டி, சமைத்துச் சாப்பிட்ட மூவர் கைது

Report Print Thayalan Thayalan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

இந்தோனேசியாவில், அழியும் நிலையில் உள்ள உராங்உட்டான் வகை மனிதக் குரங்கொன்றைச் சுட்டுக்கொன்று, வெட்டி சமைத்துச் சாப்பிட்ட மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

பாம் ஒயில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இவர்கள், அப்பகுதியில் திரிந்துகொண்டிருந்த மனிதக் குரங்கைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் அதைத் துண்டுகளாக வெட்டி சமைத்துச் சாப்பிட்டனர். இந்தச் சம்பவம் ஊடகங்களில் படங்களுடன் வெளியானதையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

சாட்சிகள் சிலரை விசாரித்ததில் சந்தேக நபர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்தனர். குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் இடத்தில் இருந்து மனிதக் குரங்கின் எலும்புகளையும், ஊழியர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து காய்ந்த நிலையில் மனிதக் குரங்கின் இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமிடத்து, அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments