இரண்டே மாதத்தில் 242 கிலோ எடை குறைந்த உலகின் குண்டு பெண்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
583Shares
583Shares
lankasrimarket.com

எகிப்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு வந்துள்ள பெண்ணின் எடை இரண்டே மாதத்தில் 242 கிலோ குறைந்துள்ளது.

உலகிலேயே குண்டு பெண்ணான ஈமன் அகமது(வயது 36) எகிப்து நாட்டை சேர்ந்தவர், இவரின் உடல் எடை 500 கிலோ ஆகும்.

பல வருடங்களாக படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் இருந்த ஈமன் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார்.

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இரண்டு மாத சிகிச்சையிலேயே ஈமன் 242 கிலோ குறைந்துள்ளார்.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் Mufaddal Lakdawala கூறுகையில்,

ஸ்லீவ் காஸ்ட்ரெகெடோமி அறுவை சிகிச்சை மற்றும் டயட்கள் மூலம் ஈமனின் 242 கிலோ எடையை குறைத்துள்ளோம்.

தற்போது அவர் 262 கிலோ எடையில் உள்ளார். அவரின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாகவே உள்ளன.

வரும் மாதங்களில் ஈமன் இன்னும் 20-30 எடை குறைவார் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments