தந்தை சொன்ன அந்த வார்த்தை: 19 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சிறுவன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
201Shares
201Shares
lankasrimarket.com

சீனாவில் தந்தை ஒருவர் மகனை டிவி பார்க்க கூடாது என்று கூறியதால் அச்சிறுவன் உடனடியாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Dazu பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவன் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி அளவில் அவர்கள் வசிக்கும் வீட்டின் 19 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

இதுதொடர்பாக நடத்திய முதல் கட்ட விசாரணையில், பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அச்சிறுவன், சற்று நேரம் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காக டிவி போட்டு பார்த்துள்ளார்.

ஆனால் அச்சிறுவனின் தந்தையோ டிவி எல்லாம் பார்க்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனால் மிகுந்த வருத்தமடைந்த சிறுவன், திடீரென்று தன் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து அங்கிருந்து கீழே குதித்துள்ளான்.

அங்கிருந்து குதித்த சிறுவன் கீழே இருந்த காரின் மீது விழுந்து, ரத்த வெள்ளத்துடன் பரிதாபபாக பலியாகியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments