500 கிலோ எடை குண்டு பெண்...இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் Eman Ahmed(36), இவர் உலகின் அதிக எடை கொண்ட பெண் ஆவார்.

இவரின் எடை 500 கிலோவிற்கும் மேலாக இருந்தது, இதனால் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதன் பயனாக அவர் தனது உடலின் பாதி எடையை குறைத்துள்ளார். 36 வயதான Eman Ahmed தற்போது 242 கிலோ எடைகுறைந்து சக்கர நாற்காலியில் உட்காரும் அளவிற்கு எடை குறைத்துள்ளார்.

இவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் Dr Muffazal Lakdawala கூறுகையில், தற்போது இவர் சக்கர நாற்காலியில் உட்காரும் அளவிற்கு தேறியுள்ளார்.

தற்போது 242 கிலோ எடை குறைத்துள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Eman Ahmed-க்கு இடது காலில் பக்கவாதம் மற்றும் மூட்டுவலி பிரச்சனை உள்ளது.

இதனால் அவர் சிடி ஸ்கேனில் நுழையும் அளவிற்கு எடை குறைந்து விட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளது. மேலும் மூளை தொடர்பான பிரச்சனைகளும் உள்ளது.

அவர் தண்ணீர் தொடர்பான் ஆதராங்களையே எடுத்து வருகிறார். அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்.

அவர் வயிற்றில் உணவு செரிமான தொடர்பான பிரச்சனை ஏற்படுத்துவதை 75 சதவீதம் அகற்றிவிட்டோம்.

இதனால் அவர் கூடிய விரைவில் 100 கிலே எடையை குறைத்துவிடுவார், தற்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments