கோமா நிலையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்: நெகிழ்ச்சியான சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோமா நிலையில் இருந்த போது குழந்தை பிறந்துள்ளது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Amelia Bannan (34), இவர் பெண் பொலிசாக பணியாற்றி வருகிறார், இவரது கணவரும் பொலிஸ் அதிகாரி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு Amelia Bannan கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் அவர் கோம நிலைக்கு சென்றார். அவர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

கோமா நிலைமைக்கு சென்றதால், அவருக்கு தனியாக செவிலிய பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கோமா நிலையில் இருந்த கடந்த 4 மாதங்களுக்கு முன்பு Amelia Bannan-வுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையின் பயனாக அமேலியாவுக்கு சமீபத்தில் கோமாவில் இருந்து மீண்டும் பழைய நினைவுகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments