தவளையை சமைத்து சாப்பிட்ட நபர் மரணம்: உயிர் தப்பிய நண்பர்கள்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் கொரியா நாட்டில் தவளையை சமைத்து சாப்பிட்ட நண்பர்களில் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் உள்ள Daejeon நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பகுதியில் தவளைகளை பிடித்து வந்து சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒரு நிகழ்வாகும்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் 57 வயதான நபர் ஒருவர் நண்பர்களுடன் தவளைகளை பிடித்து வரச் சென்றுள்ளார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு 5 தவளைகளை பிடித்து வந்துள்ளனர். பின்னர், வீட்டில் வைத்து தவளைகளை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் 57 வயதான நபர் திடீரென வாந்தி எடுத்து மயக்கமாகியுள்ளார்.

அதிர்ச்சியான நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் மறுநாள் அவர் உயிரிழந்துள்ளார்.

நபர் சாப்பிட்ட உணவை சோதனை செய்தபோது அதில் தவளை மூலமாக உணவில் விஷம் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக நண்பர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டதால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.

தவளைகள் அனைத்து பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும் கூட சில வகையான தவளைகள் விஷமிக்கதாகும்.

மேலும், இதுபோன்ற தவளைகளுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் தனது தோல் வழியாக விஷத்தை வெளியேற்றி அதன் மூலம் எதிரியை கொல்ல முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments