ரேன்சம்வேர் வைரஸை விரட்ட ரஷ்யாவில் இப்படி ஒரு மூடநம்பிக்கை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணனிகளை ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியது.

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரேன்சம்வேர் வைரஸ் பாதிப்பினால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்வதற்காக ரஷ்யா வினோத வழிமுறையை பின்பற்றியுள்ளது.

இந்து கோவில்களில் யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்றால் திருநீறு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது, அதுபோன்று தான் ரஷ்யாவும் ஒரு வழிமுறையை பின்பற்றியுள்ளது.

ரேன்சம்வேர் வைரஸ் இருந்து டேட்டாக்களை காப்பாற்ற ரஷ்ய கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்களை வைத்து புனித நீரை கணனிகளில் தெளித்து ரேன்சம்வேர் தாக்கக் கூடாது என்று வழிபாடு நடத்தியுள்ளனர்.

ரஷ்யா இதுபோன்ற மூடநம்பிக்கையை பின்பற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments