பாலியல் வன்கொடுமைக்கு இரையான 15 வயது சிறுமி: அகதிகளுக்கு தடை விதித்த நகரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆஸ்திரியாவில் 15 வயதேயான சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு இரையான சம்பவத்தை அடுத்து அங்குள்ள Tulln நகரம் அகதிகளுக்கு அதிரடி தடை விதித்துள்ளது.

Tulln நகர மேயர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறு உத்தரவு வெளியாகும் வரை அகதிகளுக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகலிட கோரிக்கையாளர்களின் குற்றச்செயல்களை ஒருக்காலும் பொறுக்க முடியாது என கூறியுள்ள அவர், விருந்தினர்களாக வருகை தந்துள்ள அவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உரிமையை தவறாக பயன்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் Tulln நகரத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று மிக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளது.

அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமியை மீண்டும் துரத்திச் சென்று பிடித்து வன்புணர்வு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை இதுவரை கைது செய்யவில்லை என்ற போதும், விசாரணையின் ஒருபகுதியாக ஒருவரை பொலிசார் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் 59 அகதிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்கள் மீது மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் குறைவானது எனவும், உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் Tulln நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் ஆஸ்திரியா உள்விவகாரத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் முறையிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments