பதவி விலகும் ஜப்பான் மன்னர்: சோகத்தில் மூழ்கிய மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவது தொடர்பான மசோதாவுக்கு, அந்த நாட்டு அமைச்சரவை தமது ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் 125வது மன்னராக 83 வயது அகிஹிட்டோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.

மேலும், ஒரு கட்டத்தில் தமது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி, ‘கிறிசாந்தமம்’ சிம்மாசனத்தை பட்டத்து இளவரசர் நருஹிட்டோவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஜப்பான் அமைச்சரவை தமது ஒப்புதலை வழங்கியுது.

தற்போது ஜப்பானில் இம்பீரியல் இல்ல சட்டத்தில், மன்னர் பதவி விலகுவதற்கான விதி இல்லை. இதன் காரணமாக மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது.

அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து இந்த மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் இறுதியில் முடிகிறபோது, குறித்த மசோதா நிறைவேற்றப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போதைய கெங்கோ சகாப்தம் முடிவுக்கு வந்து, புதிய சகாப்தம் மலர இருக்கிறது. மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு பட்டத்து இளவரசர் நருஹிட்டோ முறைப்படி மன்னராக முடிசூட்டப்படுவார்.

மன்னர் பதவி விலகும் நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 19 என உள்ளது. இதனிடையே இளவரசி மேக்கோ, பொதுமக்களில் ஒருவரான கீ கொமுரு என்பவரை காதலித்து வருகிறார்.

அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இளவரசி அந்தஸ்தை விட்டுத்தருகிறார். எனவே அவரது திருமணத்துக்கு பின்னர் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்து விடும்.

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

அந்த வகையில், தற்போதைய ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி புதிய சரித்திரம் படைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments