ஐஸ்கிரீம் சாப்பிட வந்தவர்களைக் கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஈராக்கில் பரபரப்பான சந்தைப்பகுதியில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள கரடா மாவட்டத்தில் ரமலான் நோன்பு திறக்கும் பொருட்டு ஐஸ்க்ரீம் கடைக்குச் சில இஸ்லாமிய குடும்பங்கள் சென்றுள்ளன.

அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் 26 பேர் சம்பவயிடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐஸ்க்ரீம் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டு, ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ரமலான் பண்டிகை காலம் தொடங்கும் இந்த வேளையில் ஈராக்கில் தொடர் தாக்குதல் நிகழ்த்தப்படுவது அப்பகுதி மக்களிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ரமலான் பண்டிகையின்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய ஒரே ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் 340 பேர் உடல் சிதறி பலியாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments