மேஜிக் என்ற பெயரில் பொது இடத்தில் பெண்களிடம் சில்மிஷம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவை சேர்ந்த வலைப்பூ பதிவாளரான சினா வெய்போ பதிவேற்றம் செய்துள்ள வீடியாவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், தெருவில் செல்லும் பெண்களை நெருங்கும் சினா நாணயம் மூலம் வித்தை காட்டலாமா என கேட்கிறார்.

பெண்களும் சம்மதம் தெரிவிக்க அவர்களது மார்பகத்தின் மீது நாணயத்தை வைத்து அழுத்துகிறார், மீண்டும் அழுத்துகிறார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் சினாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

பொலிசுக்கு இதுபற்றி தகவல் தெரியவர, குறித்த நபரை கண்டறிந்துவிட்டதாகவும், பெண்கள் அவர் மீது புகார் கொடுக்க தானாக முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக மார்ச் மாதத்தில் இருந்தே பெண்களிடம் எடக்குமடக்காக கேள்வி கேட்பதும், மாதவிடாய் குறித்து கேள்வி கேட்பதுமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் வைரலாகவே, சினா தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆனால் பலரும் வெறும் மன்னிப்பு மட்டும் போதாது தண்டனை வழங்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டால் ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments