அரசு வழக்கறிஞர் சுட்டுக்கொலை: 31 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

எகிப்து நாட்டில் அரசு வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான 31 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மிக பிரபலமான அரசு வழக்கறிஞரான ஹிசாம் பராகட் என்பவர் தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு முக்கிய வழக்கில் ஆஜாரியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தலைநகரான கெய்ரோவில் ஹிசாம் காரில் சென்றுக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, காரை வழிமறைத்த சிலர் ஹிசாமை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் வழக்கறிஞர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். நாட்டையே உலுக்கிய இவ்விகாரத்தை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முடக்கி விடப்பட்டது.

எனினும் எகிப்து நாட்டில் இயங்கி வரும் Muslim Brotherhood மற்றும் Hamas ஆகிய இரண்டு தீவிரவாத அமைப்புகளும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.

எனினும், சில வீடியோ ஆதாரங்கள் மூலம் பொலிசார் பலரை கைது செய்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞரை கொன்ற 31 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் Grand Mufti குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது.

இஸ்லாமிய சட்டப்படி, இக்குழு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தால் மட்டுமே உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை தீர்ப்பாக அளிக்க முடியும்.

எதிர்வரும் யூலை 22-ம் திகதி குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments