மெக்சிகோ நாட்டில் பன்றி கடித்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் மேற்கு மெக்சிகோவின் Oaxaca மாநிலத்தின் San Lucas Ojitlan என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Miguel Anaya Pablo என்ற 60 வயதான விவசாயி, இரவு மது போதையில் பன்றியுடன் சண்டையிட்டுள்ளார்.
பன்றி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற இவர் பன்றியை தூண்டியுள்ளார். கோபமடைந்த பன்றி ஆவேசமாக பாய்ந்து தாக்கியுள்ளதுடன் அவரும் பன்றியுடன் சண்டையிட்டுள்ளார்.
பன்றி விவசாயின் மூன்று கை விரல்களையும் ஆண் குறியையும் கடித்துள்ளளது. இதனால் படுகாயத்துடன் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பன்றி கடித்ததால் ஏற்பட்ட பக்டீரியா தொற்றை மருத்துவர்களால் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது. இதனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.