கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியதில் கடற்கரை கிராமங்களில் பல எண்ணிக்கையிலான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரை பகுதியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உருவான சுனாமி அலையால் அங்குள்ள கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள பல குடியிருப்புகள் இடிந்து பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சமபவத்தால் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் 11 குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் என ஆகியுள்ளதாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
2 படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 7 பேர் லேசான காயங்களுடன் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி இன்னொரு 23 பேர் நிலை குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அவர்கள் சுற்றுலா சென்றுள்ளார்களா? அல்லது மீன் பிடித்தலுக்காக சென்றுள்ளார்களா என விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அவர்களும் சுனாமியில் சிக்கியிருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என உள்ளூர் நிர்வாகிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சுனாமியை அடுத்து அப்பகுதியில் குடியிருந்து வரும் 101,78 குடிமக்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு உள்ளூர் நிர்வாகம் மாற்றியுள்ளது.