சவுதி அரேபியாவில் தீ விபத்து..இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி: 6 பேர் காயம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக இந்தியர்கள் உட்பட 11 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் Najran நகரத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 11-பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 6-பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் உடனடியாக விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் படி தெற்காசியாவில் இருந்து 9-மில்லியன் மக்கள் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இறந்தவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments