13 வயது சிறுமியின் முதுகில் அயர்ன் பாக்சை வைத்து கொடுமை செய்த தம்பதி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தம்பதியினர் அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைப்பது மற்றும் சுடு தண்ணீர் அவர் மீது ஊற்றுவது என்று பல்வேறு கொடுமைகள் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல பகுதிகளில், வறுமைக்குள்ளான இளம் பிள்ளைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, மற்றவர்கள் வீட்டில் உதவியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

அப்போது அங்கு அந்த சிறுவர், சிறுமியர்கள் அடிக்கடி பல்வேறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த வகையில் ஒரு சம்பவம் தான் பர்மாவில் நடந்துள்ளது.

பர்மாவின் Yangon பகுதியைச் சேர்ந்த தம்பதி Tun Tun (32)-Myat Noe Thu(30). இவர்களை கடந்த 3-ஆம் திகதி பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த 3-ஆம் திகதி காலை உள்ளூர் நேரப்படி 9 மணி அளவில் ஒரு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து இவர்கள் வீட்டிற்கு சென்ற போது அங்கு வேலை பார்த்து வந்த சிறுமியின் நிலைமை தெரியவந்தது என கூறினர்.

இந்த தம்பதி வீட்டில் 13-வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அச்சிறுமியை இவர்கள் பல்வேறு விதங்களில் கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் சிறுமியின் முதுகில் பல்வேறு காயங்கள் மற்றும் கால்களில் கூற முடியாத அளவிற்கு காயங்கள் இருந்ததாக தெரிவித்தனர்.

பொலிசார் விசாரணையில் கணவரான Myat Noe Thu தனது மனைவி குறித்து கூறுகையில், தனது மனைவி தான் சிறுமியை தொடர்ந்து கொடுமைப் படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் அவள் அயர்ன் பாக்ஸ் கொண்டு சிறுமியை சூடு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றுவது, சிறுமியின் கண்களில் இரும்பு குச்சிகளை வைத்து தாக்குவது மற்றும் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததது என அனைத்தையும் கூறியுள்ளார்.

தற்போது இவர்களுக்கு ஜாமின் கொடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதாக Tun Tun உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments