ஓட்டுநர் அலட்சியம்...ரயிலில் இழுத்துச்செல்லப்பட்ட பெண்: காப்பாற்ற முடியாமல் தத்தளித்த மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இத்தாலி தலைநகர் ரோம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், ரோம் நிலையத்தில் ரயில் வந்து நிற்க பயணிகள் அனைவரும் இறங்கிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, ரயிலின் கடைசி பெட்டியில் ஏறிய பெண் திடீரென இறங்குகிறார்.

இதன் போது உணவு சாப்பிட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் Gianluca Tonelli, கதவுகளை அடைத்து ரயிலை இயக்குகிறார்.

இறங்கும் போது கதவில் குறித்த பெண்ணின் பை சிக்கிக்கொள்ள ரயிலுடன் பெண் நடைமேடையில் இழுத்துச்செல்லப்படுகிறார். அந்த பெண்ணை காப்பாற்ற முடியாமல் மக்கள் தத்தளித்துள்ளனர். எனினும், ஓட்டுநர் ரயிலை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுள்ளார்.

இந்த விபத்தில் சிக்கியவர் பெலாரஷ்யன் நாட்டை சேர்ந்த 43 வயதான Natalya Garkovich என தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த Natalya Garkovich தற்போது மருத்துவமனையில் ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நலத்தில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம் விபத்திற்கான காரணம் குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments