இளம்பெண்ணிற்கு உதவ சென்ற 3 பேர் பலி

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

உஸ்பெகிஸ்தான் நாட்டில் செல்போனை தவற விட்ட இளம்பெண் ஒருவருக்கு உதவ சென்ற 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள Yangikurgon என்ற நகரில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, கை தவறி கீழே திறக்கப்பட்ட நிலையில் இருந்த கழிவுநீர் சேகரிக்கும் குழியில் விழுந்துள்ளது.

விலையுயர்ந்த செல்போன் என்பதால் அதனை எடுக்க இரண்டு வாலிபர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்ற வாலிபர்கள் இருவரும் குழிக்குள் இறங்கி செல்போனை தேடியுள்ளனர்.

ஆனால், மனிதமலத்தை சேகரிக்கும் குழி என்பதால் சகிக்க முடியாத நாற்றத்தால் இருவருக்கும் மயக்கம் ஏற்பட்டு குழியில் விழுந்துள்ளனர்.

அதே சமயம், குழிக்குள் பரவியிருந்த நச்சு வாயுவையும் இருவரும் சுவாசித்துள்ளனர்.

இருவரும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் வந்ததும் மருத்துவர் ஒருவர் குழிக்குள் இறங்கியுள்ளார்.

துரதிஷ்டவசமாக மருத்துவரும் மயங்கி குழிக்குள் விழுந்துள்ளார்.

நீண்ட நேரத்திற்கு பின்னர் தேவையான கவசங்களுடன் ஊழியர்கள் குழிக்குள் நுழைந்து மூவரையும் வெளியே கொண்டு வந்தனர்.

மருத்துவர்கள் சோதனை செய்ததில் குழிக்குள் முதலில் இறங்கிய இரண்டு வாலிபர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

மருத்துவரை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செல்போனாலும் இளம்பெண்ணிற்கு உதவ சென்றதாலும் 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments