பின்லாந்தில் நீச்சல் வீரர்கள் நிர்வாண ஓட்டம்: இதுதான் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியாக பின்லாந்தில் நூற்றுக்கணக்கான நீச்சல் வீரர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக தண்ணீரில் நீந்தியுள்ள சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு பின்லாந்தில் நடைபெற்ற இசைத்திருவிழா ஒன்றில் பங்கேற்ற சுமார் 789 பேர் நிர்வாண நீச்சலில் ஈடுபட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை அமைப்பானது உறுதிப்படுத்த காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிந்தைய முயற்சிகளில் சுமார் 300 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

குளிர்ந்த நீரில் சுமார் ஆயிரம் பேர் வரை இறங்குவார்கள் என்று விழா ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையோடு இருந்தனர்.

உடல் மீதான நேர்மறையான விஷயங்களை கொண்டாடும் முயற்சியில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்வாண நீச்சல் போட்டியில் 786 பேர் கலந்து கொண்டனர்.

இந்த உலக சாதனையை முறியடிக்கும் வகையில் தற்போது பின்லாந்தில் இந்த நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. பொதுவெளியில் நீச்சலடிப்பது பின்லாந்தில் ஒரு பாரம்பரியமாகும்.

அவான்டூன்டி எனப்படும் ஐஸ் கட்டி போன்று உருகிய மேலடுக்கு மீது துளையிட்டு அதற்குள் நீச்சலடிப்பது ஆற்றலை அதிகரிக்கும் அனுபவம் எனக்கூறி பின்லாந்தின் சுற்றுலா வாரியத்தால் ஊக்குவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments