சவுதியில் கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்: அதிகாரிகள் விசாரணை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் மொடல் அழகியான குலுட் மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் Ushaiqer என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் மொடல் அழகியான Khulood சிறிய, இறுக்கமான மற்றும் கையில்லா உடைகளை அணிந்து அங்கு நடப்பது போன்ற வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதன் பின் இது வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சிலர், மரபுகளை மீறி இவ்வாறு உடையணிந்து வீடியோ பதிவிட்டிருக்கும் பெண்ணை கைது செய்யவேண்டும் என்றும் பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட சவுதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்திருக்கிறார், அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மொடல் அழகியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments