அமெரிக்க தடை! ரஷ்யாவின் மீதான ஒரு வணிகப் போர்: கொந்தளித்த பிரதமர்

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ரஷ்யா மீதான வர்த்தகப் போருக்குச் சமமானது என ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கக்கூடிய பொருளாதாரத் தடையானது முழு அளவிலான வர்த்தகப் போருக்குச் சமமானவை.

அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் பலவீனமானவராகவே இருப்பதாக நினைக்கிறோம். இந்த தடையால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு உறவில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பொருளாதாரத் தடையால் வரும் சாதக, பாதக செயல்பாடுகள் இனிவரும் காலங்களில்தான் தெரியும். இது ரஷ்யாவின் மீதான ஒரு வணிகப் போர் என்றும் ரஷ்ய பிரதமர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்