வடகொரியாவின் அணு ஆயுதங்கள் எல்லாமே போலியாம்: வெளியான தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
522Shares
522Shares
lankasrimarket.com

வடகொரியா வைத்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் சக்தி வாய்ந்தவைகள் கிடையாது எனவும் அனைத்தும் போலிகளாக இருக்க வாய்ப்புண்டு எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அசாதாரண சூழல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை கொண்டு தாக்குவோம் என வட கொரியா அறிவித்த நிலையில், அமெரிக்காவின் மோசமான தாக்குதல்களை வட கொரியா சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்தார்.

இப்படி அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை கிம் ஜாங்கின் வட கொரியா அரசு பயமுறுத்தி வரும் நிலையில் அந்நாடு வைத்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் எல்லாம் அதிக சக்தியில்லாத போலியானவை என தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை நிபுணர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

North Korea’s Not Quite ICBM Can’t Hit the Lower 48 States என்ற தலைப்பில் Ted Postol, Markus Schiller மற்றும் Robert Schmucker ஆகிய மூன்று நிபுணர்களும் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர்.

அதில், வட கொரியாவிடம் உள்ள ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகள் கிடையாது.

உலகின் பயங்கர ஏவுகணையான ICBM-ஐ தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர்கள் கூறுவது ஏமாற்று வேலை.

அது போலியானதாக இருக்கவே வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

வட கொரியா ஏவுகணை அமெரிக்கவை தாக்கினால் குறைந்தது 493,000 பேர் உயிரிழப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் வட கொரியா ஏமாற்று வேலை செய்வதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்