அண்டார்டிகாவில் 100 ஆண்டுகள் பழமையான ’கேக்' கண்டெடுப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா பகுதியில் இருந்து 100 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.

அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பிரித்தானியாவை சேர்ந்த ஆய்வாளரான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.

advertisement

அண்டார்டிகாவின் மிகப்பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழமையான கட்டிடத்தை நார்வேயை சேர்ந்த ஆய்வாளரான கார்ஸ்டன் போர்ச்க்ரேவிங் மற்றும் அவரது குழுவினர் 1899-ம் ஆண்டு கட்டியுள்ளனர்.

பின்னர் 1910 முதல் 1913-ஆம் ஆண்டு வரையான தனது Terra Nova அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் குறித்த கட்டிடத்தில் தங்கியுள்ளார்.

குறித்த கேக் வைப்பட்டிருந்த தகரப் பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் சிறந்த நிலையிலும், உண்பதற்குரிய வாசத்துடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரித்தானியாவை சேர்ந்த Huntley & Palmers நிறுவனம் இந்த கேக்கை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள், கடந்த மே 2016 முதல் இந்தக் கட்டிடத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருவிகள், உடைகள், அழுகிப்போன மீன், இறைச்சி என இதுவரை 1,500 பொருட்களை பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

இருப்பினும் கேக் உள்பட கண்டுபிடிக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களும், இருந்த இடத்திலே திரும்ப வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்