40 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பாலியல் பலாத்காரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தாய்லாந்தில் 40 பேர் கொண்ட கும்பலால் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Koh Raed கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் வேலை நிமித்தம் வெளியே சென்று வரும் நிலையில் கடந்த ஆண்டு மே முதல் டிசம்பர் வரையான 8 மாதங்களில் 40 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கும்பல் பலமுறை போதை மருந்து வழங்கி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். 40 பேர் கொண்ட கும்பலில் பெரும்பாலானோர் அந்த கிராமத்தினர் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குடும்பத்தின் நிலை கருதியும் பாதுகாப்பு கருதியும் சிறுமி இதுவரை தமக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் குறித்த சிறுமி தமது குடியிருப்பில் தனியாக இருந்தபோது திடீரென்று இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்து சிறுமியை தாக்கி பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளார்.

இதனையடுத்து சில நாட்கள் கடந்த நிலையில் குறித்த இளைஞர் தனது நண்பருடன் வந்து சிறுமியை மிரட்டி மீண்டும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்துள்ள மாதங்களில் குறித்த இளைஞர் பலவேறு நபர்களுடன் வந்து சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 11 நபர்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமியும் குடும்பவும் கிராமத்தின் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து 8 மாதங்களாக 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அந்த கிராமத்தில் மொத்தம் 100 பேர் மட்டுமே குடியிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்